Advertisment

பெண் அளித்த பாலியல் புகார்; பத்திரிகையாளர் சந்திப்பின் போதே கைதான காங்கிரஸ் எம்.பி!

Congress MP arrested during press conference after woman files complaint

Advertisment

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், அம்மாநில காங்கிரஸ் எம்.பி மீது பாலியல் வன்கொடுமை புகாரை போலீசிடம் அளித்தார். கடந்த 17ஆம் தேதி அவர் அளித்த அந்த புகாரில், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கடந்த 4 ஆண்டுகளாக காங்கிரஸ் எம்.பி ராகேஷ் ரத்தோர் தன்னை பாலியல் வன்கொமை செய்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

அவர் அளித்த அந்த புகாரின் பேரில், காங்கிரஸ் எம்.பி ராகேஷ் ரத்தோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையில், கடந்த 20ஆம் தேதி ராகேஷ் தரப்பு வழக்கறிஞர்கள் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை தள்ளுபடி செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம், காங்கிரஸ் எம்.பி ராகேஷ் ரத்தோர் இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகேஷ் ரத்தோர் தனது வீட்டில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த போலீசார், பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போதே ராகேஷ் ரத்தோரை கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர்.

arrest case MP
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe