தொடர்ந்து இரண்டு வாரங்களாக தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு அரசு தண்ணீர் வழங்கவில்லை என கூறி அரசு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபாட்டை மகாராஷ்ட்ரா எம்.எல்.ஏ வின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
மகாராஷ்டிராவின் தியோசா தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ யசோமதி தாகூர், இவர் தனது தொகுதிக்கு உட்பட்ட சில பகுதிகளுக்கு கடந்த இரண்டு வாரங்களாக தண்ணீர் வழங்கப்படவில்லை என அரசு அதிகாரிகளை நேரில் சந்தித்து பேசினார். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் அதிகாரிகளிடம் சண்டையிட்ட அவர், அவர்களை மோசமாக திட்டினார். அதன்பின் வெளியே வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "தண்ணீர் தருவது அதிகாரிகளின் வேலை. அவர்கள் தான் எங்களுக்கான நீரை விடுவிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. எனவே தான் நான் ஆக்கிரோஷமாக நடக்க வேண்டியிருந்தது. கடந்த 2 வாரங்களாக தண்ணீர் திறந்து விடுமாறு கோரிகை வைத்து வருகிறோம். தண்ணீர் திறந்துவிட கூறி மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே உத்தரவிட்ட நிலையில், பாஜக எம்.எல்.ஏ தலையீடு செய்தார். இதனால் எங்கள் பகுதிக்கான நீர் வரவில்லை. இதனை பற்றி கேட்கவே நான் இங்கு வந்தேன்" என கூறினார். ஆனால அவரின் நோக்கம் சரி என்றாலும், அவர் நடந்துகொண்ட விதம் முறையற்றது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.