Advertisment

"நமது தேசத்துக்கே அவமானம்"... குடியரசு தலைவரை சந்தித்த பின் மன்மோகன் சிங் பேச்சு...

சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக சிஏஏ ஆதரவாளர்கள் டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய பேரணிக்கு பின்னர் அங்கு கலவரங்கள் வெடித்தன. வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் இரு தரப்பினரும் கற்களை கொண்டு கடுமையான தாக்குதல்களில் ஈடுபட்டனர். இந்த கலவரங்களில் 150 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் சூழலில் பலியானவர்களின் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இந்த கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதற்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியிருந்தார்.

Advertisment

congress members met president for delhi issue

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இதனையடுத்து சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் இன்று குடியரசு தலைவரை சந்தித்தனர். டெல்லி கலவரம் குறித்த அறிக்கை ஒன்றையும் அவர்கள் குடியரசு தலைவரிடம் சமர்ப்பித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி, "இந்திய மக்களின் வாழ்க்கை, சுதந்திரம் மற்றும் சொத்துக்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த நாங்கள் குடியரசு தலைவரிடம் வலியுறுத்தியுள்ளோம். வன்முறையைக் கட்டுப்படுத்த இயலாத உள்துறை அமைச்சரை உடனடியாக நீக்க வேண்டும் என்று நாங்கள் அவரிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளோம்" என தெரிவித்தார்.

Advertisment

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மன்மோகன் சிங், "டெல்லியில் கடந்த 4 நாட்களாக நடப்பவை மிகவும் கவலையளிக்கிறது. இது நமது தேசத்துக்கே அவமானம். இந்த கலவரத்தில் குறைந்தது 34 பேர் இறந்துள்ளனர் மற்றும் 200 பேர் காயமடைந்துள்ளனர். மத்திய அரசு தோல்வியடைந்ததின் பிரதிபலிப்பே இது" என தெரிவித்துள்ளார்.

caa Delhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe