மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் ஆந்திரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் நடந்து வருகிறது. மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக கூட்டணி பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

Advertisment

congress may loose opposition party status this time

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தற்போது வரை 51 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. மக்களவையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர குறைந்தது 55 தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்க வேண்டும். கடந்த முறையும் காங்கிரஸ் கட்சி 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. எனவே மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது. இந்நிலையில் இந்த முறை எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற இன்னும் 5 இடங்கள் தேவைப்படுகிறது.