வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அதில் பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இடையேயான பேச்சுவார்த்தையின் முடிவில் இரு நாடுகளுக்கும் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர்கள் பிரியங்கா காந்தி வாத்ரா மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா ஆகியோர் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்தனர்.