ADVERTISEMENT

ராகுலின் குடியுரிமை தொடர்பான குற்றச்சாட்டு; விசாரணைக்கு பின்னர் வேட்புமனு ஏற்பு

03:15 PM Apr 22, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாராளுமன்றத் தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அமேதி தொகுதியில் ராகுல் காந்தி தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் சில முக்கிய தகவல்கள் முறையாக இல்லை என சுயேட்சை வேட்பாளர் துருவ் லால் தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்தார்.

ADVERTISEMENT


இங்கிலாந்து குடியுரிமை, இங்கிலாந்தில் நிறுவனம் நடத்தியது மற்றும் 2003 மற்றும் 2009 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட கால சொத்து விவரம், கல்வித் தகுதி மற்றும் பெயர் தொடர்பாக ராகுல் காந்தியின் வேட்பு மனுவில் முறையான தகவல்கள் இல்லை என அதில் சுட்டிக்காட்டி உள்ளார். இதையடுத்து, ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டது.


இந்த விவகாரம் தொடர்பாக அமேதி தொகுதி தேர்தல் அதிகாரி இன்று விசாரணை நடத்தினார். ராகுல் காந்தியின் வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்ட அம்சங்கள் அனைத்தையும் ஆய்வு செய்தார். ராகுல் காந்தியின் குடியுரிமை தொடர்பான குற்றச்சாட்டும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில், ராகுல் காந்தியின் வேட்பு மனு செல்லுபடியாகும் என தெரியவந்தது. இதையடுத்து வேட்பு மனு ஏற்கப்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT