ராகுல் காந்திஎம்.பி.யின்அலுவலகத்தை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்றுஅடித்து நொறுக்கி உள்ளது
கேரள மாநிலம், வயநாடு தொகுதியில் அகிலஇந்தியகாங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், அந்த தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தியின் அலுவலகம் உள்ளது. இந்தஅலுவலகத்தின்சுற்றுச்சுவர்மீது ஏறி உள்ளே குதித்த ஒரு கும்பல், கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கியதாக வயநாடு இளைஞர்காங்கிரஸார்தெரிவித்துள்ளனர்.
அந்த கும்பலின் கைகளில் இந்திய மாணவர் அமைப்பின் கொடிகள் ஏந்தியபடி இருந்ததாகவும், அவர்கள் கூறியுள்ளனர். ராகுல் காந்திஎம்.பி.யின்அலுவலகம் சூறையாடப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.