Skip to main content

ராகுலின் குடியுரிமை தொடர்பான குற்றச்சாட்டு; விசாரணைக்கு பின்னர் வேட்புமனு ஏற்பு

Published on 22/04/2019 | Edited on 22/04/2019

 


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாராளுமன்றத் தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அமேதி தொகுதியில் ராகுல் காந்தி தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் சில முக்கிய தகவல்கள் முறையாக இல்லை என சுயேட்சை வேட்பாளர் துருவ் லால் தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்தார். 

 

a


இங்கிலாந்து குடியுரிமை, இங்கிலாந்தில் நிறுவனம் நடத்தியது மற்றும் 2003 மற்றும் 2009 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட கால சொத்து விவரம், கல்வித் தகுதி மற்றும் பெயர் தொடர்பாக ராகுல் காந்தியின் வேட்பு மனுவில் முறையான தகவல்கள் இல்லை என அதில் சுட்டிக்காட்டி உள்ளார். இதையடுத்து, ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டது.

 

a


 இந்த விவகாரம் தொடர்பாக அமேதி தொகுதி தேர்தல் அதிகாரி இன்று விசாரணை நடத்தினார். ராகுல் காந்தியின் வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்ட அம்சங்கள் அனைத்தையும் ஆய்வு செய்தார். ராகுல் காந்தியின் குடியுரிமை தொடர்பான குற்றச்சாட்டும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில், ராகுல் காந்தியின் வேட்பு மனு செல்லுபடியாகும் என தெரியவந்தது. இதையடுத்து வேட்பு மனு ஏற்கப்பட்டது.
                                                                                                                                                                                    

சார்ந்த செய்திகள்

Next Story

"விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண வேண்டும்" - ராகுல் காந்தி எம்.பி. வலியுறுத்தல்!

Published on 29/01/2021 | Edited on 29/01/2021

 

congress leader rahul gandhi mp press meet at delhi

 

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும் என்று மத்திய அரசை ராகுல் காந்தி எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

 

வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து டெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி எம்.பி., "மூன்று வேளாண் சட்டங்களால் பெரிய நிறுவனங்கள் வேளாண் பொருட்களை மொத்தமாகப் பதுக்கி வைக்கும். வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய மத்திய அரசு விவசாயிகளைத் தாக்குகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மத்திய அரசு சீர்குலைத்துவிட்டது. புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது மட்டுமே விவசாயிகளுக்கு ஒரே தீர்வாக அமையும். செங்கோட்டைக்குள் விவசாயிகள் செல்லும் வரை காவல்துறை என்ன செய்துகொண்டிருந்தது?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பின்போது ராகுலுடன் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

 

Next Story

"வேலை கிடைக்காததற்கு அவர்கள் காரணமல்ல; மோடிதான் காரணம்" - ராகுல் காந்தி பேச்சு...

Published on 25/01/2021 | Edited on 25/01/2021

 

congress leader rahul gandhi election campaign at karur district


தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக மூன்று நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினருமான ராகுல் காந்தி, மூன்றாவது நாளான இன்று (25/01/2021) கரூர் மாவட்டம், சின்னதாராபுரத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய ராகுல்காந்தி எம்.பி., "இந்திய விவசாயத்தை அழிக்க பிரதமர் மோடி மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார். விவசாயத்தை மூன்று கார்ப்பரேட் முதலாளிகளிடம் பிரதமர் கொடுத்துவிட்டார். இளைஞர்களுக்கு வேலை கிடைக்காததற்கு அவர்கள் காரணமல்ல; மோடிதான் காரணம்" என்றார்.

congress leader rahul gandhi election campaign at karur district

 

ராகுல்காந்தியின் தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

 

கரூரை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் ராகுல்காந்தி, தனது மூன்று நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (25/01/2021) மாலை மதுரை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.