மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் ஆந்திரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் நடந்து வருகிறது. இந்நிலையில் போபால் தொகுதியில் பாஜக வேட்பாளர் பிரக்யா முன்னிலையில் இருப்பதாய் கேட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் வாக்கு எண்ணிக்கை மையத்திலேயே அதிர்ச்சியில் மாரடைப்பு வந்து உயிரை விட்டுள்ளார்.

congress leader passed away at counting station

Advertisment

Advertisment

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக கூட்டணி பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலையில் உள்ள நிலையில் போபால் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பிரக்யா தாக்கூர் முன்னிலை பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

இந்நிலையில் சிஹோர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரத்தன் சிங் தாகுர் போபால் வாக்கு எணிக்கை மையத்திற்கு வாக்கு நிலவரம் குறித்து விசாரித்துள்ளார். அப்போது பிரக்யா முன்னிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனை கேட்டு சிறிது நேரத்திலேயேஅவர் அங்கேயே மாரடைப்பு வந்து சரிந்து விழுந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.