/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/malliga-art_1.jpg)
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் நரேந்திர மோடிக்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில், "காங்கிரஸ் கட்சிசார்பில் புதுப்பித்தசாதிவாரி கணக்கெடுப்புக்கான கோரிக்கையை மீண்டும் ஒருமுறை பதிவு செய்யும் வகையில் இந்த கடிதத்தை எழுதுகிறேன். பல எதிர்க்கட்சிகளின் தலைவர்களைப் போலவே நானும் எனது சகாக்களும் இந்தக் கோரிக்கையை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பல முறை முன்வைத்துள்ளோம். காங்கிரஸ் கூட்டணி அரசு முதன்முறையாக 2011-12 இல் 25 கோடி குடும்பங்களை உள்ளடக்கிய சமூக பொருளாதார மற்றும் சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பை (SECC) நடத்தியது என்பதை நீங்கள் அறிவீர்கள். இருப்பினும், மே 2014 இல் நீங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு காங்கிரஸ் மற்றும் பிற எம்.பி.க்களும் இந்த கணக்கெடுப்பை வெளியிடக் கோரிய போதிலும் பல காரணங்களால் இந்ததரவை வெளியிடவில்லை.
புதுப்பிக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு இல்லாத நிலையில், அர்த்தமுள்ள சமூக நீதி மற்றும் அதிகாரமளிக்கும் திட்டங்களுக்கு குறிப்பாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மிகவும் அவசியமான நம்பகமான தரவுத்தளம் முழுமையடையாது என்று நான் அச்சப்படுகிறேன். இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது மத்திய அரசின் பொறுப்பாகும். 2021 இல் வழக்கமான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கவேண்டும். ஆனால், அது இன்னும் நடத்தப்படவில்லை என்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதை உடனடியாக செய்வதுடன் முழுமையானசாதிவாரி கணக்கெடுப்பை அதன் ஒருங்கிணைந்த பகுதியாக நடத்த வேண்டும் என்று கோருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)