பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம் மத அடிப்படையில் நாட்டை பிளவு படுத்துவதாக கூறி எதிர் கட்சிகள், மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தினத்தன்று காங்கிரஸ் கட்சி நிர்வாகம், பிரதமர் நரேந்திர மோடிக்கு அரசியலைப்பு சட்ட புத்தகத்தை அமேசானில் ஆர்டர் செய்து, குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியலமைப்புக்கு விரோதமானது என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள் என கூறி அந்த புத்தகத்தை பரிசளித்துள்ளது.
அந்த 'ஸ்க்ரீன் ஷாட்'டை தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அக்கட்சி, "அன்புள்ள பிரதமரே... அரசியலமைப்பு சட்ட புத்தகம் விரைவில் உங்களை வந்தடையும். நாட்டை துண்டாடுவதில் இருந்து தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது, அந்த புத்தகத்தை படியுங்கள்" எனவும் குறிப்பிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.
Follow Us