Congress Front-10 am Vote Counting Status

Advertisment

குஜராத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 182 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட நிலையில் இன்று வாக்குப்பதிவானது துவங்கியுள்ளது. அதேபோல் இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியும் துவங்கியுள்ளது.

குஜராத்மற்றும் இமாச்சலப்பிரதேசத்தில்சட்டசபை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில்,இந்த இரண்டு மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது வீடியோ பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணி நிலவரப்படி குஜராத்தில் உள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளில் பாஜக 147 தொகுதிகளிலும், காங்கிரஸ் 20தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 10 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. அதேபோல் இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 சட்டப்பேரவை தொகுதிகளில் காங்கிரஸ் 33 இடங்களிலும், பாஜக 32 இடங்களிலும், மற்றவை 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

குஜராத்தில் பாஜக வேட்பாளர் பூபேந்திர படேல், கட்லோடியா தொகுதியில் முன்னிலையில் உள்ளார். காங்கிரஸின் ஜிக்னேஷ் மேவானி, வட்கம் தொகுதியில் முன்னிலையில் உள்ளார். இமாச்சலப் பிரதேசத்தில் பாஜகவின் ஜெயராம் தாக்கூர், சோராஜ் தொகுதியில் முன்னிலையில் உள்ளார். குஜராத்தில் பாஜக சார்பில் போட்டியிட்ட கிரிக்கெட் வீரர் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிபாவா தான் போட்டியிட்ட ஜாம்நகரில் (வடக்கு) முன்னிலையில் உள்ளார்.