Advertisment

கையில் விழுந்த காங்கிரஸ் கொடி... தாங்கிப் பிடித்த சோனியா காந்தி!

Congress flag falling in hand ... Sonia Gandhi holding!

காங்கிரஸ் கட்சிக்கொடியை அக்கட்சியின் செயல் தலைவர் சோனியா காந்தி ஏற்றியபொழுது அவரது கையில் கொடிவிழுந்த நிகழ்வு நடந்துள்ளது.

Advertisment

காங்கிரஸ் கட்சியின் 137வது நிறுவனத் தின விழா டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. நாட்டின் பல்வேறு இடங்களிலும் 'சங்கல்ப் திவஸ்' என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வரும் நிலையில், டெல்லியில் நடைபெற்ற இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.

Advertisment

congress

அப்பொழுது காங்கிரஸ் கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொடியை காங்கிரஸ் செயல் தலைவர் சோனியா காந்தி ஏற்ற முற்பட்டார். அப்பொழுது அவர்கொடி கயிற்றை இழுக்க முடியாமல் சிரமப்பட்ட நிலையில் அருகிலிருந்த காங்கிரஸ் தொண்டர் கயிற்றை வேகமாக இழுத்தார். நொடிப்பொழுதில் கயிற்றில் கட்டப்பட்டிருந்த கொடி சோனியா காந்தியின் கையில் விழுந்தது. அதனைஅவர்தாங்கி பிடித்துக்கொண்ட நிலையில், உடனே அங்கு வந்த பெண் தொண்டர் உதவியுடன் மீண்டும் கொடி கயிற்றில் கட்டப்பட்டு ஏற்றப்பட்டது.

congress
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe