Advertisment

காங்கிரஸ் செயற்குழு அக்.16இல் கூடுகிறது!

Congress Executive Committee meets on Oct. 16!

Advertisment

டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவகலகத்தில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி அன்று காலை 10.00 மணிக்கு கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளதாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற உள்ள செயற்குழு கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஏ.கே. அந்தோணி, கே.சி. வேணுகோபால், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

இக்கூட்டத்தில் பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் குறித்தும், தற்போதைய அரசியல் சூழல் பற்றியும், கட்சிக்குப் புதிய தலைவர் நியமனம், காங்கிரஸ் கட்சியின் உட்கட்சித் தேர்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Delhi soniya gandhi congress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe