Advertisment

கண்ணீருடன் நன்றி தெரிவித்த டி.கே.சிவக்குமார்

 D.K.Sivakumar thanked with tears

கர்நாடகாவில் 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு மே 10, 2023 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மும்முனை போட்டியில் உள்ள நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை துவங்கியது.

Advertisment

பிற்பகல் 1 மணி நிலவரப்படி காங்கிரஸ் 131 இடங்களிலும், பாஜக 66 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 21 இடங்களிலும், மற்றவை 6 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன. பெங்களூரு நகரில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் அங்கு காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த தேர்தலை விட இந்த முறை 47 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னணியில் இருப்பது கர்நாடக காங்கிரஸ் கட்சியினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisment

கனகபுரா தொகுதியில் போட்டியிட்டகர்நாடக காங்கிரஸ் தலைவர்டி.கே.சிவக்குமார் வெற்றி பெற்றார்.இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.கே.சிவக்குமார், 'வாக்களித்த அனைவருக்கும் நன்றி’ என தெரிவித்துக் கொண்டிருந்தபோது திடீரென கண்ணீர் விட்டு அழுதபடி தலைவர்கள், தொண்டர்கள், மக்கள் அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார்.

karnataka congress sivakumar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe