Advertisment

புதுவை காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

புதுவை காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ராகுல்காந்தி மீதான தாக்குதலை கண்டித்து புதுவை மாநில காங்கிரஸ் சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:-

நம் நாட்டுக்காக நேரு குடும்பம் உயிர் தியாகம் செய்துள்ளது. நேரு, இந்திரா, ராஜீவ்காந்தி ஆகியோர் கொண்டு வந்ததிட்டங்களால் தான் இந்திய மக்கள் சுபிட்சமாக வாழ்கிறார்கள். நரேந்திர மோடி என்ன தியாகம் செய்தார்? கடந்த 3 ஆண்டுகளில் பா.ஜனதா அரசு என்ன திட்டத்தை கொண்டு வந்துள்ளது? மக்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ஒரே நாள் இரவில் தடை செய்தனர். தற்போது இறந்தவர்களை அடக்கம் செய்ய ஆதார் எண் அவசியம் என கூறி உள்ளனர். பா.ஜனதா அரசு மக்களுக்கு இடையூறுகளை தான் செய்கிறது என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் ஷாஜகான், எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், பாலன், ஜெயமூர்த்தி, விஜயவேணி, டெல்லி பிரதிநிதி ஜான்குமார், முன்னாள் அமைச்சர் பெத்தபெருமாள், மாநில காங்கிரஸ் துணை தலைவர்கள் விநாயக மூர்த்தி, தேவதாஸ், பொதுச்செயலாளர்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், தனுசு, ஐ.என்.டி.யூ.சி. தலைவர் ரவிச்சந்திரன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

- சுந்தரபாண்டியன்

Advertisment
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe