ADVERTISEMENT

எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த காங்கிரஸ்!

02:48 PM Nov 26, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்திய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், வரும் 29ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நேற்று (25.11.2021) டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் பாராளுமன்ற வியூகக் குழு கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், பணவீக்கம், பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, சீன ஆக்கிரமிப்பு மற்றும் ஜம்மு & காஷ்மீர் விவகாரங்கள் ஆகியவற்றை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. மேலும், கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே விவசாயிகள் பிரச்சனையையும், குறைந்தபட்ச ஆதார விலை விவகாரத்தையும் எழுப்ப முடிவு செய்துள்ள காங்கிரஸ், அதேநாளில் லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் எழுப்ப முடிவெடுத்துள்ளது.

மேலும், இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, தாங்கள் எழுப்பப்போகும் விவகாரங்களில், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்போம் என தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் 29ஆம் தேதி, எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT