congress bears travel cost of needy workers

நாடு முழுவதும் ஊரடங்கால் வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல ஆகும் செலவைக் காங்கிரஸ் கட்சி ஏற்கும் எனச் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.

Advertisment

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், இதனால் தினக்கூலிகள் மற்றும் புலம்பெயர்ந்ததொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பல நாட்களாக வருமானம் ஏதும் இல்லாத காரணத்தால், நாட்டின் பல பகுதிகளில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப முயன்று வருகின்றனர். இதில் பலர் நடைப்பயணமாகவும், சைக்கிள்களிலும் பல நூறு கிலோமீட்டர்கள் பயணித்து வருகின்றனர். இந்த ஆபத்தான பயணங்களால் பலர் உயிரிழந்தும் உள்ளனர்.

Advertisment

இந்நிலையில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப மத்திய அரசு சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்து உள்ளது. ஆனால் சில சிறப்பு ரயில்களில் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ள காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ஊரடங்கால் சிக்கித் தவிக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் அவர்கள் சொந்த ஊர் திரும்ப ஆகும் ரயில் பயணச் செலவைக் காங்கிரஸ் கட்சி ஏற்கும் என அறிவித்துள்ளார். மேலும், "பிரதமரின் கரோனா நிதிக்கு ரூ.151 கோடி ரயில்வே அமைச்சகம் கொடுக்கும் நிலையில், தொழிலாளர்களுக்குக் குறிப்பாக இலவச ரயில் பயணத்தை, இந்த நேரத்தில் ஏன் கொடுக்க முடியாது?" எனக் கேள்வியும் எழுப்பியுள்ளார்.