Skip to main content

100 ஆக இருந்தது பூஜ்யம் ஆனது எப்படி...? காங்கிரஸ் டெல்லியை இழந்தது ஏன்..?

Published on 26/05/2019 | Edited on 27/05/2019

10 ஆண்டுகளுக்கு முன் 100 சதவீதம் என்ற வெற்றி வீதத்தை டெல்லியில் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி இன்று ஒரு தொகுதியை கூட வெல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நாட்டின் தலைநகர், காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த ஒரு இடம் இன்று காங்கிரஸ் கட்சியை தோல்வியடைய செய்ய என்ன காரணம்?

 

congress and bjp strategies in delhi

 

 

நடந்து முடிந்த 17வது மக்களவை தேர்தல் முடிவுகளில் அதிக இடம் பெற்ற பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. இந்த தேர்தலில் மாபெரும் வெற்றியை ருசித்த பாஜக குஜராத், ஹரியானா, டெல்லி, உத்தரகாண்ட், ஹிமாச்சல் பிரதேசம், அருணாச்சல் பிரதேசம், திரிபுரா, டாமன் மற்றும் டையூ, சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற்று க்ளீன் ஸ்வீப் செய்துள்ளது.

இதில் கவனிக்கத்தக்க ஒரு தொகுதி நமது நாட்டின் தலைநகரான டெல்லி. 2009 மக்களவை தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் ஒன்றை கூட வெல்லாத பாஜக 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு தேர்தல்களில் 7 க்கு 7 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. 2009 ல் இருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் பாஜக வின் செல்வாக்கு அபரிமிதமாக வளர்ந்தது. அதே நேரம் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி சரிந்தது. இதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுவது 2012 ல் 'ஆம் ஆத்மீ' கட்சியின் வருகை.

ஊழலுக்கு எதிராக தொடங்கப்பட்ட இயக்கம் கட்சியாக மாறி அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியை தீவிரமாக எதிர்த்து. இதனையடுத்து பல குற்றச்சாட்டுகளில் சிக்கி தவித்து வந்த காங்கிரஸ் கட்சியானது, பாஜக, ஆம் ஆத்மீ என இரு கட்சிகளின் சூறாவளி பிரச்சாரங்களுக்கு நடுவே தனது வாக்கு வங்கியை இழக்க தொடங்கியது. காங்கிரஸ் இழந்த வாக்குகள் ஆம் ஆத்மீ மற்றும் பாஜக வுக்கு செல்லும் என்ற நிலையில், அப்போது வீசிய மோடி அலை அந்த வாக்குகளை பாஜக  பக்கமாக இழுத்து சென்றது. இதனையடுத்து 2009 தேர்தலில் 7 இடங்களில் வென்றிருந்த காங்கிரஸ் கட்சியை 2014 ல் அனைத்து தொகுதிகளிலும் தோற்கடித்தது பாஜக.

அதன் பின் தற்போது நடந்த தேர்தலில் பாஜகவை எதிர்க்க கூட்டணி சேர்வது என முடிவெடுத்தது காங்கிரஸ் மட்டும் ஆம் ஆத்மீ. ஆம் ஆத்மீ தலைமையிலான அரசு டெல்லியில் பதவியேற்றது முதல் தொடர்ந்து பாஜக வுடன் மோதல் போக்கை மேற்கொன்று வந்தது. எனவே பாஜக வை எதிர்க்க காங்கிரஸ் கட்சியுடன் இணைய முடிவெடுத்தது. பல கட்ட பேச்சு வார்த்தை நடந்த பிறகும் சீட் ஒதுக்கீட்டில் முடிவு எட்டப்படாததால் இரண்டு கட்சிகளும் தனித்தே போட்டியிட்டது. அதே நேரம் பாஜகவும் தனித்து தேர்தலை எதிர்கொள்ள முடிவெடுத்தது.

கண்டிப்பாக வெல்வோம் என்ற தொகுதிகளில் மூத்த தலைவர்களையும், வெற்றி வாய்ப்பு கடினமாக உள்ள தொகுதிகளில் மக்களை ஈர்க்க பிரபலங்களை வேட்பாளராக நிறுத்துவது எனவும் பாஜக சிறப்பான தேர்தல் யுத்திகளை கையாண்டது. இதன் பலன் அவர்களுக்கு இந்த தேர்தலின் முடிவில் தெரிந்தது.

கடந்த முறை 46 சதவீத வாக்குகளை பெற்ற பாஜக இந்த முறை 56 சதவீத வாக்குகளை பெற்றது. அதே நேரம் காங்கிரஸ் வெறும் 22 சதவீதமும், ஆம் ஆத்மீ 18 சதவீத வாக்குகளுமே பெற்றது. காங்கிரஸ் கட்சியின் இந்த தோல்விக்கான முக்கிய காரணமாக, கூட்டணி முடிவில் நிலைபாடாற்ற தன்மை, தொகுதிக்கு ஏற்ப வியூகங்கள் வகுக்காமை ஆகியவை அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ராமர் படம் கொண்ட தட்டில் பிரியாணி; வைரல் வீடியோவால் பரபரப்பு!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Action against the shop owner on Biryani on Ram's paper plate set

டெல்லி ஜகாங்கிர்புரி பகுதியில் பிரபல ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் கடந்த 21ஆம் தேதி அன்று ராமர் உருவம் கொண்ட தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ‘ராமர் படத்துடன் கூடிய காகித தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படுகிறது. மேலும், அந்தத் தட்டுக்கள் குப்பை தட்டுகளிலும் வீசப்படுவதாக’ காட்டப்படுகிறது.  தூக்கி எறியும் தட்டுகளில் ராமரின் உருவங்களைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, கடையில் பொதுமக்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்களும், பஜ்ரங் தள் உறுப்பினர்களும் அந்தத் தட்டுகளில் பிரியாணி விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, காவல்துறையிலும் புகார் அளித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடை உரிமையாளரைக் கைது செய்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், ‘காகிதத் தட்டுகளின் மூட்டையிலிருந்து ஒன்று அல்லது இரண்டு தட்டுகளில் ராமரின் புகைப்படங்கள் இருந்தன எனக் கூறியுள்ளனர். மேலும் ஜஹாங்கிர்புரி காவல் நிலையம் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது’ எனத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மார்க்கெட்டிங் நோக்கத்திற்காக இதைச் செய்தார்களா? அல்லது வேறு எதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

“சில உண்மைகளை சொன்னதால் எதிர்கட்சிகள் பீதியடைந்துள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
PM Modi says Opposition parties panics because some truths have been told

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடியும் அங்கு பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதற்கிடையில் அவர் தேர்தல் பரப்புரையில் பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

PM Modi says Opposition parties panics because some truths have been told

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம், டோங் பகுதியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று (23-04-24) நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, “காங்கிரஸ் ஆட்சியில் ஹனுமான் பாடலைக் கேட்பது கூட குற்றமாகிவிடும். இந்த முறை ராம நவமி அன்று முதல் முறையாக ராஜஸ்தானில் ஷோபா யாத்திரை ஊர்வலம் நடத்தப்பட்டது. ராஜஸ்தான் போன்ற மக்கள் ராம்-ராம் எனக் கோஷமிடும் மாநிலத்தில் ராம நவமிக்கு காங்கிரஸ் தடை விதித்துள்ளது.

இன்று அனுமன் ஜெயந்தி அன்று உங்களுடன் பேசும் போது, சில நாட்களுக்கு முன் எடுத்த ஒரு படம் நினைவுக்கு வருகிறது. சில நாட்களுக்கு முன், காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில், கடையில் அமர்ந்து ஹனுமான் பாடலை கேட்டதால், கடைக்காரர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டார். நேற்று முன்தினம் ராஜஸ்தானில், நான் சில உண்மையை நாட்டுக்கு முன் வைத்தேன். ஒட்டுமொத்த காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளும் பீதியடைந்து உள்ளது. உங்களின் சொத்துக்களை அபகரித்து, சிறப்பு வாய்ந்தவர்களுக்குப் பங்கிட காங்கிரஸ் சதி செய்கிறது என்ற உண்மையை நான் முன்வைத்தேன்.

அவர்களது அரசியலை நான் அம்பலப்படுத்தியதும், அவர்கள் மிகவும் கோபமடைந்து, அவர்கள் என்னை அவதூறாகப் பேச ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் ஏன் உண்மையைக் கண்டு பயப்படுகிறார்கள் என்பதை நான் காங்கிரஸிடம் இருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அவர்கள் ஏன் தங்கள் கொள்கையை இவ்வளவு மறைக்கிறார்கள். நீங்களே கொள்கையை உருவாக்கியபோது, இப்போது அதை ஏற்க ஏன் பயப்படுகிறீர்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.