இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைப்பெற உள்ளது. இதில் முதற்கட்ட மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதியும் , இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதியும் நடைப்பெற உள்ள நிலையில் தேசிய கட்சிகள் இது வரை தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
--LINKS CODE------
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவை தேர்தல் அறிக்கை ஏப்ரல் 2 ஆம் தேதி டெல்லி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கை வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி , முன்னால் மத்திய அமைச்சர்கள் , மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று தேர்தல் அறிக்கையை வெளியிடுகின்றனர்.
இந்த தேர்தல் அறிக்கையில் கல்வி கடன் தள்ளுபடி , விவசாய கடன் தள்ளுபடி , இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு , குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயித்தல் , ஏழை , எளிய மக்களுக்கு ஓய்வூதியம் அதிகரித்தல்,தொழில்முனைவோர்களுக்கு சலுகைகள் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் காங்கிரஸ் கட்சியின் மக்களவை தேர்தல் அறிக்கையில் இடம் பெற அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக, நாட்டின் 5 கோடி ஏழைக் குடும்பங்களை ஏழ்மையிலிருந்து மீட்க, ஆண்டுக்கு ரூ.72,000 வழங்கும் குறைந்தபட்ச ஊதிய உறுதி திட்டத்தை காங்கிரஸ் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
(பி.சந்தோஷ் சேலம்)