Advertisment

காதலர்களுக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்து! 

Congratulations on giving a bouquet to lovers!

பிப்ரவரி 14, உலகம் முழுவதும் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த காதலர் தினத்தை முன்னிட்டு ஜாதி, மத ஏற்றத்தாழ்வுகளை ஒழித்திட ஓர் வாய்ப்பாக உள்ள காதலை போற்றுவோம், மனிதர்களாக மாற்றம் பெறுவோம் என்பதை வலியுறுத்தி புதுச்சேரி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் புதுச்சேரி பாரதி பூங்கா, கடற்கரை பகுதிகளுக்கு வருகை தந்த காதலர்களுக்கு பூங்கொத்து, இனிப்புகள் வழங்கப்பட்டன.

Advertisment

இந்த நிகழ்ச்சியில், தந்தை பெரியார் தி.க. புதுச்சேரி தலைவர் வீர.மோகன், துணைத்தலைவர் ம.இளங்கோ, செயலாளர் செ.சுரேஷ், பொருளாளர் இரா. பெருமாள், இளைஞரணி தலைவர் சி.சிவமுருகன், தொழிற்சங்க தலைவர் சு.ஜெகன், மகளிரணி தலைவர் ஆ.சுகந்தி, புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு சுவாமிநாதன், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், ராஜா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisment

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe