Advertisment

கும்பமேளாவில் கூட்ட நெரிசல்; புனித நீராட தடை!

Congestion at Kumbh Mela Ban on holy water

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பமேளா கடந்த 13ஆம் தேதி முதல் தொடங்கியது. பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் இந்த நிகழ்வு அடுத்த மாதம் 26ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த கும்பமேளாவில், இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர். கும்பமேளாவில் பங்கேற்கும் பக்தர்கள், கங்கை, யமுனை, மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடமான அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். இதுவரை 10 கோடிக்கும் மேலான பக்தர்கள் புனித நீராடியுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் கும்பமேளாவில் ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (29.01.2025) தை அமாவாசை என்பதால் அதிகாலை முதலே லட்சக்கணக்கானோர் திரண்டதால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. கும்பமேளாவின் சிறப்புச் செயல் அலுவலர் அகன்ஷா ராணா இந்த சம்பவம் குறித்துக் கூறுகையில், “பக்தர்கள் நீராடச் செல்லும் வழித்தடங்களில், சில தடைகளை உடைக்கப்பட்டதால், நெரிசல் ஏற்படுவது போன்ற சூழல் ஏற்பட்டது.

Advertisment

இதனால் சிலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்” எனத் தெரிவித்தார். மகா கும்பமேளாவின் கூட்ட நெரிசல் நிலைமை குறித்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் பேசிய பிரதமர் மோடி, உடனடியாக தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இந்த சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே சமயம் மகா கும்பமேளாவில் புனித நீராடத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

kumbamela stampede uttarpradesh
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe