Congestion in former chief minister's conference; 8 people lost their lives

தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்டகூட்ட நெரிசலில் எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

ஆந்திர மாநிலமுன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் கந்துக்கூர் பகுதியில் ஆளுங்கட்சிக்கு எதிராக மாநாடு நடைபெற்றது. இதில் தெலுங்கு தேசம் கட்சியினர், பொதுமக்கள் எனஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்தவுடன் அங்கிருந்த மக்கள் மற்றும் கட்சியினர் என அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேற முயன்றபோது அங்கு கூட்ட நெரிசலும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதில் நெரிசலில் சிக்கி எட்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஐந்து பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா பத்து லட்சரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர்களுக்கு சிபிஆர் சிகிச்சை அளிக்கப்படுவது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில் சிகிச்சை பெறுபவர்களைசந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.