/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/puducherry-art_3.jpg)
புதுச்சேரியில் மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி ‘இந்தியா’ கூட்டணி சார்பில் இன்று (18.09.2024) முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த முழு அடைப்பு போராட்டத்தால் வணிக வளாகங்கள், கடைகள், திரையரங்குகள், பேருந்துகள், ஆட்டோக்கள் உள்ளிட்டவை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. அதே சமயம் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் வழக்கம் போல் செயல்படும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனால் பொதுமக்களில் இயல்பு வாழ்க்கை பெரிது பாதித்துள்ளது. மேலும் புதுச்சேரியில் முழு அடைப்பு காரணமாகக் கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. குறைந்த அளவே அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் கடலூர் பேருந்து நிலையத்தில் பயணிகள் தவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)