Advertisment

ஓடும் ரயிலில் பெண் மீது சிறுநீர் கழித்த ராணுவ வீரர்; பிரதமருக்குப் பறந்த புகார்!

ஓடும் ரயிலில் பெண் மீது சிறுநீர் கழித்த ராணுவ வீரர்; பிரதமருக்கு பறந்த புகார்!

டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் நிலையத்தில் இருந்து சத்தீஸ்கரின் துர்க் நோக்கி கோண்ட்வானா எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் சத்தீஸ்கரைச் சேர்ந்த பெண் ஒருவரும் அவரது 7 வயது குழந்தையும் கீழ் அடுக்கு படுக்கையில் பயணித்து வந்தனர்.

Advertisment

அப்போது, அவர்களுக்கு மேல் படுக்கையில் படுத்து இருந்த ராணுவ வீரர் ஒருவர் குடிபோதையில் சிறுநீர் கழித்துள்ளார். இது கீழ் படுக்கையில் படுத்திருந்த பெண் மீது விழுந்துள்ளது. இதில் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், ராணுவ வீரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக அந்தப் பெண் தனது கணவருக்குத்தகவல் கொடுத்துள்ளார்.

Advertisment

அதன் பின்னர், இது தொடர்பாக ரயில்வே உதவி எண்ணைத்தொடர்பு கொண்டு புகார் அளித்தார். தகவல் அறிந்த போலீசார், உடனடியாக விரைந்து வந்தனர். அங்கு அவர்கள், இந்தச் சம்பவம் தொடர்பாக வெறும் புகைப்படம் மட்டும் எடுத்துக்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ரயிலை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது. இதில் விரக்தியடைந்த பாதிக்கப்பட்ட பெண், ஆன்லைன் மூலம் பிரதமர் அலுவலகம் மற்றும் ரயில்வே அமைச்சகம் உள்ளிட்டவைகளுக்குப் புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் ரயில் பயணிகளிடையே சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.

Military Train chattishghar
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe