Skip to main content

இஸ்லாமியர்களின் உணர்வைப் புண்படுத்தியதா பிரியா வாரியரின் வைரல் பாடல்!

Published on 14/02/2018 | Edited on 14/02/2018

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இருப்பது மலையாள நடிகை பிரியா வாரியர் நடித்து வெளிவந்திருக்கும் ஒரு அடார் லவ்  படத்தின் ‘மாணிக்ய மலராயி பூவி’ பாடல்தான். அதில் சில நொடிகளே வந்து கண்சிமிட்டிச் செல்லும் பிரியா வாரியர்தான் தற்போது இளசுகளின் ஹாட் டாபிக்.

 

Priya

 

இந்தப் பாடலில் இஸ்லாமியர்களின் உணர்வைப் புண்படுத்தியிருப்பதாகக் கூறி, ஐதராபாத்தில் உள்ள ஃபலக்நூமா காவல்நிலையத்தில் சிலர் புகார் அளித்துள்ளனர். அதாவது இந்தப் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தபோது, அதில் தீர்க்கதரிசி முகமதுவை இழிவுபடுத்தும் விதமாக அமைந்திருப்பதாக அந்தப் புகாரில் தெரிவித்துள்ளனர்.

 

 

இதுகுறித்து ஃபலக்நூமா காவல்நிலைய உயரதிகாரி சையது ஃபையாஸ், ‘சில இஸ்லாமியர்கள் காவல்நிலையத்திற்கு வந்து ‘மாணிக்ய மலராயி பூவி’ பாடல் இஸ்லாமியர்களின் உணர்வைப் புண்படுத்தியிருப்பதாகக் கூறி புகாரளித்தனர். அவர்கள் எந்தவிதமான வீடியோ ஆதாரத்தையும் இதுவரை சமர்ப்பிக்கவில்லை. நாங்கள் அதைக் கொண்டுவருமாறு கூறியிருக்கிறோம். அதனால், இதுவரை எந்த வழக்கும் பதியப்படவில்லை’ என தெரிவித்துள்ளார். பிரியா வாரியர் மீது எந்த வழக்கும் தொடரப்படவில்லை.

 

ஒரு அடார் லவ் படத்தின் இயக்குனர் ஒமர் லுலு, ‘இந்தப் பாடல் உலகில் உள்ள பல கோடி பேருக்கு பிடித்திருக்கிறது. ஆனால், சில மிகச்சிறுபாண்மையாக இருக்கும் இஸ்லாமியர்கள்தான் இதை எதிர்க்கின்றனர்’ என விளக்கமளித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

"எப்போதுமே திகைப்பேன்" - சூர்யா வாழ்த்து

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

suriya wishes mammooty jyothika kaathal movie trailer

 

மலையாளத்தில் மம்மூட்டி, ஜோதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் படம்  'காதல் - தி கோர்'. இந்தப் படத்தை ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்குகிறார். இப்படம் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாளத்தில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் ஜோதிகா. மேலும் முன்னணி நட்சத்திரமான மம்மூட்டியுடன் முதல் முறையாக நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

 

இந்த படம் கோவாவில் வருகிற 20 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நடக்கும் 54வது கோவா சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. மேலும் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து வருகிற 23ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்தது. 

 

இந்த நிலையில் படத்தின் ட்ரைலரை இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு படக்குழு வெளியிட்டது. ட்ரைலரில் மம்மூட்டி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். அப்போது ஒரு பிரச்சனை வருகிறது. இதை தாண்டி இடைத்தேர்தலில் நின்று ஜெயித்தாரா, என்ன பிரச்சனை வந்தது என்பதை விரிவாக காண்பித்துள்ளது போல் தெரிகிறது. இந்த ட்ரைலரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த சூர்யா, "மலையாளத் திரையுலகம் எப்படி சவாலான கதைகளை குறிப்பிடத்தக்க வகையில் எளிதாக உருவாக்குகிறது என்பதைப் பார்த்து எப்போதுமே திகைப்பேன்" எனக் குறிப்பிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 

 

 

 

Next Story

நிறைமாத கர்ப்பிணியான பிரபல நடிகை மரணம்

Published on 01/11/2023 | Edited on 01/11/2023

 

Pregnant Malayalam tv actress Dr Priya passed away

 

மலையாள சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் பிரியா (34). திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகி இருந்தார். இப்போது 8 மாத கர்ப்பமாக இருந்த நிலையில் வழக்கம் போல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பெற்ற அவர் பலனின்றி இறந்துள்ளதாக நடிகர் கிஷோர், அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

 

மேலும் பிரியாவின் குழந்தை தற்போது ஐசியு-வில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். நடிப்பை தாண்டி பிரியா ஒரு மருத்துவராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவு கேரளா சின்னத்திரை உலகில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த சில தினங்களுக்கு முன்பு, மற்றொரு பிரபல மலையாள நடிகையான ரெஞ்சுஷா மேனன் திருவனந்தபுரத்தில் உள்ள அவரது குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவருக்கு வயது 35. அவர் இறந்த சில நாட்களிலே மற்றொரு சின்னத்திரை பிரபலம் மறைந்திருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kishor Satya (@kishor.satya)