Advertisment

மேற்குவங்க ஆளுநர் மீது பாலியல் புகார்!

complaint against West Bengal Governor

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஒப்பந்தபணியாளராகபணியாற்றும் பெண் ஒருவர் அம்மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த்போஸ்மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.ஹேர்ஸ்ட்ரீட்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் இந்த பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மேற்கு வங்க ஆளுநருக்கு எதிரான பாலியல் வழக்கு குறித்துதிரிணாமுல்காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி பஞ்சா கூறுகையில், “இந்தசெய்தியைக்கேட்டு நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம். பெண்களின் உரிமைகள்குறித்துப்பேசிசந்தேஷ்காலியைஅடைந்த அதே ஆளுநர் தற்போது வெட்கக்கேடான சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். ஆளுநர் பதவியின்நற்பெயருக்குக்களங்கம் விளைவித்துள்ளார். இதில் பாதிக்கப்பட்டவர் ராஜ் பவனில் பணிபுரிபவர் ஆவார். ஆளுநர் இதுபோன்ற கொடூரமான குற்றங்களில் ஈடுபடுவதை விட வெட்கக்கேடானது வேறு எதுவுமில்லை. இன்று பிரதமர் மேற்கு வங்கத்திற்கு வருகிறார். அப்போது அவர் ராஜ்பவனில் தங்குகிறார்” எனத் தெரிவித்தார்.

Advertisment

இந்நிலையில் இது குறித்து மேற்குவங்க ஆளுநர் சி.வி.ஆனந்தபோஸ்விளக்கமளித்துள்ளார். அதில், “வாய்மையே வெல்லும். இந்தஜோடிக்கப்பட்டகதைகளுக்கு நான் பயப்பட மாட்டேன். என்னை இழிவுபடுத்தி அதன் மூலம் தேர்தல் ஆதாயம்பெறச்சிலர் விரும்பினால்அவர்களைக்கடவுள் ஆசீர்வதிக்கட்டும். அதே சமயம் மேற்கு வங்காளத்தில் ஊழல் மற்றும் வன்முறைக்கு எதிரான எனது போராட்டத்தை அவர்களால் தடுத்து நிறுத்த முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

governor kolkata
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe