Complaint about being told to take off underwear... explain the national examination camp!

நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு கடந்த 17/07/2022 பிற்பகல் 02.00 மணிக்கு தொடங்கிய நிலையில், மாலை 05.30 மணிக்கு நிறைவடைந்தது. தமிழ், இந்தி உள்பட 13 மொழிகளில் நடந்த நீட் தேர்வை சுமார் 18.72 லட்சம் பேர் எழுத விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் கேரளாவில் நீட் தேர்வு எழுத வந்த மாணவி ஒருவரிடம் உள்ளாடையை களைய சொன்னதாக புகார் எழுந்தது. மாணவியின் புகாரின் பேரில் கேரள மாநிலம் கொல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், இது தொடர்பாக நீட் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை விளக்கமளித்துள்ளது.

Advertisment

இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள விளக்கத்தில், கேரளாவில் நீட் எழுத வந்த மாணவியிடம் உள்ளாடையை களைய சொன்னதாக எந்த சம்பவமும் நடைபெறவில்லை. தேர்வின் பொழுதும், தேர்வுக்கு பின்னரும் எந்தவித புகாரும் கொடுக்கப்படவில்லை. நீட் தேர்வின் ஆடைக்கட்டுப்பாட்டு வழிகாட்டு நெறிமுறைகளில் இதுபோன்று கூறப்படவில்லை. அந்த குறிப்பிட்ட மாணவி குறிப்பிட்ட தேர்வு மையத்தில் நீட் தேர்வு எழுதியதுஉறுதிபடுத்தப்பட்டுள்ளது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.