Advertisment

"இது குஜராத் அல்ல கேரளா..." மூவர்ணக் கொடி மூலம் பாஜகவிற்கு பதிலடி!

pallakadu

கேரளாவில் நடைபெற்றஉள்ளாட்சித் தேர்தலின்வாக்கு எண்ணிக்கை கடந்த 16 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில், பாலக்காடுநகராட்சியின்52 வார்டுகளில்28 இடங்களைவென்ற பா.ஜ.க.,பாலக்காடு நகராட்சியையும் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து தங்கள் வெற்றியைக் கொண்டாடும் விதமாக, பா.ஜ.க உறுப்பினர்கள், அமித்ஷா மற்றும் மோடியின் பேனரையும் மலையாளத்தில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என எழுதப்பட்ட பேனரையும் நகராட்சிக் கட்டிடத்தின் மேலிருந்து கீழாகத் தொங்கவிட்டனர். இது சர்ச்சையைக் கிளப்பியது.

Advertisment

அதே நேரத்தில், பாஜக மாநிலச் செயலாளர், பாலக்கட்டில் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் பேரணியின்வீடியோவை ‘பாலக்காடு கேரளாவின் குஜராத்’ என்ற தலைப்பில் வெளியிட்டதை அடுத்து, இந்தச் சம்பவம் மேலும் சர்ச்சைக்குரியதாக மாறியது. நகராட்சிக் கட்டிடத்தின் மேல் 'ஜெய்ஸ்ரீ ராம்' எழுதப்பட்டபேனர்தொங்கவிடப்பட்டது தொடர்பாக,கேரளபோலீசார்பா.ஜ.க உறுப்பினர்கள் சிலரைவிசாரித்து வருகின்றனர்.

Advertisment

இந்தநிலையில், பாஜகவினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டின் மாணவர் அமைப்பினர், இன்று பேரணியாகச் சென்று பாலக்காடு நகராட்சிக் கட்டிடத்தின் மேல், இந்தியத் தேசியக் கொடியைப்பறக்கவிட்டனர். மேலும் அவர்கள் பேரணியின்போது, இது ஆர்.எஸ்.எஸ்அலுவலகம் அல்ல. நகராட்சிக் கட்டிடம். இது கேரளா அல்ல குஜராத் என்ற பேனரை ஏந்தியிருந்தனர்.

Marxist Communist Kerala
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe