Advertisment

பாலியல் தொந்தரவு செய்த மா.கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. சஸ்பெண்ட்!!!

kerala

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7394694274"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

பாலியல் தொந்தரவு செய்த மா.கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ அக்கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்ட மா.கம்யூனிஸ்ட் செயலாளரும் சோரனூா் தொகுதி எம்.எல்.ஏ. யுமாக இருப்பவா் பி.கே.சசி. இவா் மா.கம்யூனிஸ்டில் 45 ஆண்டுகளாக இருக்கிறாா். மேலும் இரண்டாவது முறையாக மா.செ.ஆக இருக்கும் சசி அக்கட்சியின் ஜனநாயக வாலிபா் சங்கத்தில் வட்டார குழுபொறுப்பாளராக இருக்கும் இளம்பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தாராம்.

Advertisment

இதற்கு அந்த பெண் பலமுறை எச்சாித்தும் எம்.எல்.ஏ சசி அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு செய்வதை நிறுத்தவில்லையாம். மேலும் செல்போனிலும் அடிக்கடி அந்த பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்து வந்தாராம். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் கேரளா மாநில செயலாளா் கொடியேறி பாலகிருஷ்ணனுக்கு புகாா் கடிதம் எழுதியும் எந்த நடவடிக்கையும் எம்.எல்.ஏ மீது எடுக்கவில்லையாம்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="2374301885"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இதனால் அந்த பெண் செல்போன் உரையாடல் ஆதாரத்துடன் மா.கம்யூனிஸ்ட் அகில இந்தியா பொதுச்செயலாளா் சீதாராம் யெச்சூாி மற்றும் பிருந்தா காரத் ஆகியோருக்கு புகாா் அனுப்பினாா். உடனே இது சம்பந்தமாக குழு ஒன்று அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் விசாரணையில் எம்.எல்.ஏ சசி அந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உண்மையென தொிய வந்ததையடுத்து எம்.எல்.ஏ சசியை 6 மாதம் சஸ்பெண்ட் செய்து அக்கட்சி உத்தரவு பிறப்பித்தது. இச்சம்பவம் கேரளா மா.கம்யூனிஸ்ட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Marxist Communist MLA Kerala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe