Advertisment

காமன்வெல்த் போட்டிகள்: தங்கம் வென்றார் பி.வி.சிந்து 

PV Sindhu

காமன்வெல்த் பேட்மிட்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தங்கம் வென்றார்.

Advertisment

22ஆவது காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 72 நாடுகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரில் இந்தியா இதுவரை 15 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 43 பதக்கங்கள் வென்றுள்ளது.

Advertisment

இந்த நிலையில், இன்று நடைபெற்ற ஒற்றையர் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த பி.வி. சிந்து தங்கம் வென்றார். அவர் இறுதிப்போட்டியில் கனடா வீராங்கனையை 21-15, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இதன் மூலம் இந்தத் தொடரில் இந்தியா வென்ற தங்கப் பதக்கத்தின் எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe