Commercial gas cylinder price drops by 134 rupees No change in cooking cylinder price!

Advertisment

வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை, நடப்பு ஜூன் மாதத்தில் 134 ரூபாய் குறைந்துள்ளது.

உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை நிலவரம், உள்நாட்டில் சந்தை தேவை, உற்பத்தித்திறன், இறக்குமதி செலவு, இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் கேஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், நடப்பு ஜூன் மாதத்தில் 19 கிலோ எடையுள்ள வணிக கேஸ் சிலிண்டர் விலை 134 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி, நடப்பு மாதத்தில் சென்னையில் 2373 ரூபாய் ஆகவும், சேலத்தில் 2326.50 ரூபாய் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

அதேநேரம், வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலை சென்ற மாதத்தில் நிர்ணயிக்கப்பட்ட அதே விலையே தொடர்கிறது. அதன்படி, சேலத்தில் 1036.50 ரூபாய் ஆகவும், சென்னையில் 1018.50 ரூபாய் ஆகவும் உள்ளது.

Advertisment

கடந்த காலங்களில் மாதத்தின் நடுவிலும் கேஸ் சிலிண்டர் விலை திடீரென்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ள நிலையில், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் எப்போது வேண்டுமானாலும் மாற்றம் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.