Advertisment

‘சொந்த ஊருக்கு வா தங்கச்சி’ என நடிகைக்கு நூதன அழைப்பு விடுத்த பாஜகவினர்

BJP called for an actress

Advertisment

‘சொந்த ஊருக்கு வா தங்கச்சி’ என்று எழுதி, பூ, தேங்காய், குங்குமம், வளையல் உள்ளிட்ட பூஜை பொருட்களை பார்சலில் வைத்து பெங்களூருவில் உள்ள நடிகை ரம்யாவின் வீட்டு முகவரிக்கு மண்டியா மாவட்ட பா.ஜனதா கட்சியினர் அனுப்பி வைத்துள்ளனர்.

ramya

அப்போது அவர்கள், ‘எங்களுடைய மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் நடிகை ரம்யா. இவர் காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பிரிவு தலைவியாக உள்ளார். தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக பிரசாரம் செய்யும் அவர், தேர்தலில் வாக்களிக்க விரும்புவதில்லை. வாக்களிக்க வருவதும் இல்லை. எங்களுடைய மண்டியா மக்களால் முன்பு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், தற்போது மண்டியா பக்கமே வருவதில்லை. ஓட்டு போட்ட எங்க மக்களுக்கு அவர் எதையும் செய்ததில்லை. அவருக்கு ஓட்டு போட்ட மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று அவர் பார்க்க வேண்டும் என்பதால்தான், அவர் சொந்த ஊருக்கு வருவதற்காக தான், ரம்யாவுக்கு பார்சல் அனுப்பி வைத்துள்ளோம்’ என்றனர்.

Advertisment

சமூக வலைதளத்தில், தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் நடிகை ரம்யா, கர்நாடக சட்டசபை தேர்தலிலும், நகர உள்ளாட்சி தேர்தலிலும் வாக்களிக்கவில்லை என்பதால் பாஜக உள்ளிட்ட சில கட்சிகள் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

Actress called
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe