Advertisment

செப்டெம்பரில் நிறம் மாறும் 100 ரூபாய்!! பழைய நூறு ரூபாய் செல்லுமா ??

புது நூறு ரூபாய் நோட்டு அச்சடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டதாகவும் வரும் செப்டெம்பர் மாத இறுதிக்குள் புது நூறுரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு வரவிருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.

Advertisment

note

பாஜக ஆட்சியில் பணமதிப்பிழப்பு கொண்டுவரப்பட்டு புதிய 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கொண்டுவரப்பட்டன. அதனை தொடர்ந்து புதிய 200 ரூபாய் நோட்டுகள் 50 மற்றும் 10 ரூபாய் என அனைத்தும்பல பலவண்ணங்களில் வெளியிடப்பட்டது.

Advertisment

இந்நிலையில் வரப்போகும் புதிய 100 ரூபாய் நோட்டு பல பாதுக்காப்பு அம்சங்களை கொண்டதாக இருக்கும் எனவும் அண்மையில் வெளியிடப்பட்ட 10 ரூபாய் நோட்டை விட பெரியவதாகவும் பழைய 100 ரூபாயை விட சிறியதாகஊதாநிறத்திலும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் வெளியிட்ட 10 பத்து ரூபாய் நோட்டு மற்ற ரூபாய் நோட்டுகளை விட சிறியதாக இருந்தது.நோட்டின் பின்புறம்கோனாக் சூரிய கோவில் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் வரப்போகும் ஊதா நிற புது 100 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி டேவாஸ் ரூபாய் நோட்டு அச்சகத்தில் நடைபெற்றுவருவதாக செய்திகள் வந்துள்ளன. இதனால் பழைய நூறு ரூபாய் புழக்கத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது. பழைய நூறு ரூபாய்நோட்டுக்களும்செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

demonetization money
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe