Advertisment

காதலிக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்த மாணவிகள்... கடும் எதிர்ப்பை சம்பாதித்த கல்லூரி நிர்வாகம்!

காதலிக்க மாட்டோம் என்று கல்லூரி மாணவிகள் சபதம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. காதலர்களுக்கு வருடத்தில் மிக முக்கிய நாளாக கருதப்படும் தினம் பிப்ரவரி 14ம் தேதி. தங்களின் காதலை வெளிப்படுத்த அந்த நாளை காதலர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதற்கு இளைஞர்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும், சில அமைப்புகள் அதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தென் மாநிலங்களை விட வட மாநிலங்களில் காதலர் தினத்துக்கு கடுமையான எதிர்ப்பு எழுகின்றது.

Advertisment

இந்நிலையில் மராட்டியத்தில் கல்லூரி மாணவிகள் காதலர் தினத்தன்று காதலிக்க மாட்டோம் என்று உறுதி மொழி எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாவதுடன் கல்லூரிக்கு எதிராக நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள். அந்த வீடியோவில் "நாங்கள் யாரையும் காதலிக்க மாட்டோம், காதலித்து திருமணம் செய்ய மாட்டோம்" என்று அந்த கல்லூரியின் முதல்வர் சொல்ல அதை மாணவிகளும் உறுதிமொழி போல திரும்ப சொல்லியுள்ளனர். இதை ஒரு தரப்பினர் வரவேற்றாலும், பெருமாபாலானவர்கள் அதனை எதிர்த்து குரல் எழுப்பி வருகிறார்கள்.

VIRAL
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe