College student marries professor in classroom in west bengal

வகுப்பறையில் பேராசிரியரும், கல்லூரி மாணவரும் திருமணம் செய்து கொண்டது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா அருகே நாடியா பகுதியில் ஹரிங்காட்டா தொழில்நுட்பக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில், பாயல் பானர்ஜி என்ற பெண் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வகுப்பறையில், பாயல் பானர்ஜியும், ஒரு இளைஞரும் திருமணம் செய்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.

Advertisment

அந்த வீடியோவில் மாலை அணிருந்திருந்த இளைஞர், மணப்பெண் அலங்காரத்துடன் இருந்த பேராசிரியர் பாயல் பானர்ஜிக்கு குங்குமம் பூசி திருமண சடங்குகளை செய்வது போல் இருந்தது. இதை மற்ற மாணவர்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, இடைக்கால துணைவேந்தர் தபஸ் சக்ரபர்த்தி இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த குழு அமைத்தார்.

வைரலான வீடியோவுக்கு பதிலளித்த பேராசிரியர் பாயல் பானர்ஜி, ‘எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். முதலாம் ஆண்டு மாணவர்களால் ஒரு கலாச்சார நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் இடம்பெற்ற குறும்படத்தில் திருமணம் ஒரு பகுதியாக இருந்தது. மாணவர்கள் என்னை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கக் கேட்டுக்கொண்டார்கள், நானும் சம்மதித்தேன். மற்ற ஆசிரியர்களுக்கு இது பற்றித் தெரியும், நிகழ்ச்சிக்கு ஒப்புக்கொண்டேன். அப்போது யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. மாணவர்கள் அட்டையை அச்சிட்டு முழு விஷயத்தையும் திட்டமிட்டோம். நானும் எனது முதலாம் ஆண்டு மாணவர்களும் ஸ்கிரிப்டைப் பின்பற்றி நடித்தோம். இது ஒன்றும் பெரிய விஷயமல்ல. மாணவர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டதால் மட்டுமே நான் ஒப்புக்கொண்டேன்’ என்று தெரிவித்தார்.

Advertisment

இந்த வீடியோவை தவிர, பேராசிரியர் மற்றும் மாணவர் ஒருவரையொருவர் கணவன் மனைவியாக ஏற்றுக்கொண்டு கையொப்பமிட்ட பல்கலைக்கழக லெட்டர் பேடும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதாகக் கூறப்படுகிறது.