
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் நகரத்தில் பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தல் வழக்குப்பதிவு செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தூர் நகரை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்றும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங், “இந்தூரில் பிச்சை எடுப்பதை தடை செய்து நிர்வாகம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. பிச்சை எடுப்பதற்கு எதிரான எங்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் இந்த மாதம் டிசம்பர் இறுதி வரை நகரத்தில் நடைபெறும்.
ஜனவரி 1 முதல் யாராவது பிச்சை போடுவது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது முதல் வழக்குப்பதிவு (எப்.ஐ.ஆர்) செய்யப்படும். இந்தூரில் வசிப்பவர்கள் அனைவருக்கும் பிச்சை கொடுப்பதன் மூலம் பாவத்தில் பங்கு கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். மக்களை பிச்சையெடுக்க வைக்கும் பல்வேறு கும்பல்களை, நிர்வாகம் சமீபத்திய மாதங்களில் அம்பலப்படுத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.