கர்நாடக முன்னாள் முதல்வரான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், காபி டே நிறுவனத்தின் உரிமையாளருமான சித்தார்த் நேற்று இரவு திடீரென மாயமாகியுள்ளது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

coffee day cafe owner siddhartha's letter recovered after he went missing

Advertisment

Advertisment

இந்நிலையில் அவர் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு எழுதியதாக கூறப்படும் கடிதம் வெளியாகியுள்ளது. மிகவும் உருக்கமாக அந்த கடிதத்தை அவர் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், "என் மீது நம்பிக்கை வைத்திருந்த அனைவரையும் கைவிட்டதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனது நிறுவனதில் செய்யப்பட்ட ஒவ்வொரு பணப்பரிமாற்றத்துக்கும் நான் மட்டுமே பொறுப்பு. சட்டமும் அதைத்தான் குறிப்பிடுகிறது.

நீண்டகாலமாக நான் தொடர்ந்து போராடி வருகிறேன். இனியும் என்னால் இந்த அழுத்தங்களை தாங்கிக்கொள்ள முடியாது. அனைத்தையும் நான் கைவிடுகிறேன். யாரையும் ஏமாற்ற வேண்டும் அல்லது தவறாக வழிநடத்த வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. ஒரு தொழில்முனைவோராக நான் தோல்வியடைந்துவிட்டேன். ஒருநாள் என்னை நீங்கள் புரிந்து கொள்வீர்கள், தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார். காணாமல் போன அவரை போலீசார் தேடிவந்த நிலையில் இந்த கடிதம் தற்போது மேலும் பல புதிய சந்தேகங்களை எழுப்பியுள்ளது.