style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
ஏர் இந்தியா விமானத்தில் தரப்பட்ட உணவில் கரப்பான்பூச்சி இருந்ததாக புகார் எழுந்துள்ளது. ஏர் இந்தியா விமானத்தில் காலையில் பரிமாறப்பட்ட உணவில் கரப்பான்பூச்சி இருந்ததாக பயணி ஒருவர் புகார் அளித்திருக்கிறார். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
நேற்று காலையில் மத்திய பிரதேசத்தின் போபாலில் இருந்து ரோகித் ராஜ்சிங் சவுகான் என்பவர் ஏர் இந்தியா விமானத்தில் மும்பைக்கு பயணமானார். அப்போது அவருக்கு விமானத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. அதில் கரப்பான் பூச்சி இருந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் விமான சிப்பந்திகளிடம்கூறியுள்ளார் ஆனால் அவர்கள் அவரது புகாரை ஏற்க மறுத்துவிட்டனர்.
இதனையடுத்து மும்பையில் தரையிறங்கியதும் ஓடோடிச் சென்று ரோகித் ராஜ் சிங் சவுகான் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் ஏர் இந்தியா நிறுவனம் மேற்கொள்ளவில்லை என ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.