Skip to main content

ஏர் இந்தியா விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி!!;பயணி புகார்

Published on 03/02/2019 | Edited on 03/02/2019
 Cockroach in the food provided on the air india plane; Traveler complains

 

ஏர் இந்தியா விமானத்தில் தரப்பட்ட உணவில் கரப்பான்பூச்சி இருந்ததாக புகார் எழுந்துள்ளது. ஏர் இந்தியா விமானத்தில் காலையில் பரிமாறப்பட்ட உணவில் கரப்பான்பூச்சி இருந்ததாக பயணி ஒருவர் புகார் அளித்திருக்கிறார். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

 

நேற்று காலையில் மத்திய பிரதேசத்தின் போபாலில் இருந்து ரோகித் ராஜ் சிங் சவுகான் என்பவர் ஏர் இந்தியா விமானத்தில் மும்பைக்கு பயணமானார். அப்போது அவருக்கு விமானத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. அதில் கரப்பான் பூச்சி இருந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் விமான சிப்பந்திகளிடம் கூறியுள்ளார் ஆனால் அவர்கள் அவரது புகாரை ஏற்க மறுத்துவிட்டனர்.

 

இதனையடுத்து மும்பையில் தரையிறங்கியதும் ஓடோடிச் சென்று ரோகித் ராஜ் சிங் சவுகான் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் ஏர் இந்தியா நிறுவனம் மேற்கொள்ளவில்லை என ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'உங்கள் குழந்தை செர்லாக் பேபியா?' -எச்சரிக்கை மணி அடித்த உலக சுகாதார அமைப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Is your child a Cerelac baby?'-World Health Organization has sounded the alarm

நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான செர்லாக் என்பது ஊட்டச்சத்து உணவு எனப் பொதுவாக குழந்தைகளுக்கு கொடுக்கும் பழக்கம் இந்தியாவில் நீண்ட நெடும் காலமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 'நெஸ்லே' நிறுவனம் இந்தியாவில் பல்லாயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்து வருகின்ற நிலையில், நெஸ்லேவின் குறிப்பிடத் தகுந்தத் தயாரிப்பில் ஒன்றாக உள்ளது செர்லாக்.

இந்தநிலையில் IBFAN எனப்படும் Baby Food Action Network என்ற ஐரோப்பிய அமைப்பு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விற்கப்படும் செர்லாக் எனும் குழந்தைகளுக்கான  ஊட்டச்சத்து உணவை ஆய்வு செய்தது. ஊட்டச்சத்து பொருள் என்று கூறப்படும் செர்லாக்கில் சுவைக்கு அடிமையாக்கி அடிக்கடி உண்ண வைக்கும் அடிக்டிவ் சுகர் என்பது சேர்க்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது நெஸ்லேவின் முக்கிய சந்தையாக கருதப்படும் பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகர் சேர்க்கப்படவில்லை. ஆனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில் மட்டும் அடிக்டிவ் சுகர் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனையாகும் செர்லாக்கை  குழந்தைக்கு ஒரு முறை ஊட்டுகையில் 2.2 சதவீதம் அடிக்டிவ் சுகர் குழந்தையின் உடலுக்கு செல்கிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் இந்தியாவை விட எத்தியோப்பியா போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகரின் அளவு 5.2 கிராமாக உள்ளது. நெஸ்லேவின் இந்தச் செயல்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இளம் வயதிலேயே சர்க்கரை நோய் வருவதற்கும், குழந்தைகள் பார்ப்பதற்கு அளவுக்கு மீறி குண்டாக இருப்பதற்கும் இவையே காரணம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story

'இன்னைக்கு ஒரு புடி' தாத்தா மருத்துவமனையில் அனுமதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமான தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

'வில்லேஜ் குக்கிங் சேனல்' என்ற யூடியூப் சேனல் சமையலுக்கு மிகவும் பிரபலமானது. ஒரு குழுவாகச் சேர்ந்து உணவை சுவாரசியமாக சமைத்து சாப்பிடும் இந்த யூடியூப் சேனல் இந்திய அளவில் அதிக சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட சேனல்களில் ஒன்றாகும்.

அண்மையில் ராகுல்காந்தி உள்ளிட்ட பலர் இந்த சேனலில் உணவு சமைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலப்படுத்தி இருந்தனர். இந்த யூடியூப் சேனலில் அனைவரும் இளைஞர்கள் என்ற நிலையில், மிகவும் குறிப்பிடத்தகுந்த முதியவர் பெரியதம்பி தாத்தா. 'இன்னைக்கு ஒரு புடி' என்ற வசனம் மற்றும் உடல் மொழியால் பலர் மனதில் இடம் பிடித்தவர்.

இந்நிலையில், முதியவர் பெரியதம்பி தாத்தா தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படங்கள் ஒன்று இணையத்தில் வெளியாகி இருந்தது. சேனலை நடத்தும் சுப்பிரமணியன் வேலுசாமி இது குறித்து வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் 'தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி' எனத் தெரிவித்துள்ளார்.