பள்ளி புத்தகப்பையில் நாகப்பாம்பு... அதிர்ச்சியில் உறைந்த வகுப்பறை

A cobra in a school book bag... a classroom frozen in shock!

பள்ளி புத்தகப் பையில் நாகப் பாம்பு இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அண்மைக்காலங்களில் பள்ளி மாணவர்கள் அணிந்து கொள்ளும் காலணிகள் குறிப்பாக ஷூக்களில் பாம்புகள் பதுங்கி இருப்பது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வந்தது. இதனால் காலணிகளை அணியும்பொழுது நன்கு சோதித்துவிட்டு அணிய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில் பள்ளி புத்தகப் பையில் நாகப்பாம்பு இருப்பது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மத்தியபிரதேசம் மாநிலம் ஷாஜாபூர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஒருவர் தனது புத்தகப்பையில் ஏதோ ஒன்று ஊர்வதை போல் இருக்கிறது என ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஆசிரியர் அப்பையை பள்ளி வகுப்பறைக்கு வெளியே எடுத்துச் சென்று சோதனையிட்ட பொழுது புத்தகங்களுக்கு நடுவில் நாகப்பாம்பு இருந்தது. உடனே பையிலிருந்த பொருட்கள் அனைத்தையும் கீழே கொட்டிய ஆசிரியர் பாம்பை வெளியேற்றினார். அதனை தொடர்ந்து பாம்பு அங்கிருந்து ஓடியது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/RketORN1LUY.jpg?itok=u7VmPBYf","video_url":" Video (Responsive, autoplaying)."]}

schools snake
இதையும் படியுங்கள்
Subscribe