சிசிடிவி கேமராக்களில்சிக்கும் சில வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாவது வழக்கம். இந்நிலையில் சிறுவன் ஒருவன் பாம்பை தெரியாமல் மிதிக்க, அவருடன் வந்த தாய் பதறியடித்துக்கொண்டு உயிரை பணயம் வைத்து மகனைகாப்பாற்றும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், தாயுடன் சிறுவன் ஒருவன் மாடியிலிருந்து கீழே இறங்கி வருகிறான். கீழேவாசலில் நாகப்பாம்பு ஒன்று ஊர்ந்து வருகிறது. அதனை கவனிக்காமல் சிறுவன் பாம்பின் மீது காலை வைக்க, 'சடார்' என்று பாம்பு படமெடுத்து சீறியது. இதனை சற்று தாமதமாக சுதாரித்துக்கொண்ட தாய், சிறுவனை தூக்கி காப்பாற்றினார். பின்னர் அந்த பாம்பு ஊர்ந்து சென்றது. இந்த காட்சிகள் தற்பொழுது வைரலாகி வருகிறது.
{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/M9Nyjzhsdbk.jpg?itok=4OQvMmBo","video_url":"