மரத்தில் பதுங்கியிருந்த 12 அடி நீள பாம்பை மீட்புப்படையினர் பிடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் அரசு குடியிருப்பு காலனியில் பாம்பு ஒன்று இருப்பதாக வனத்துறை மீட்பு பிரிவு காவலர்களுக்கு தகவல் வந்துள்ளது. இதனை அடுத்து அந்த பகுதிக்கு சென்ற அவர்கள் பாம்பை தேடினார்கள்.
மூன்று மணி நேரம் தேடியும் பாம்பை அவர்கள் கண்டறிய முடியவில்லை. ஆனால் அந்த இடத்தை விட்டு பாம்பு எங்கேயும் செல்லவில்லை என்பதையும் அவர்கள் உறுதிப்படுத்திக் கொண்டன்ர. பிறகு தற்செயலாக மரம் ஒன்றில் இருந்து சத்தம் வருவதை கண்ட அவர்கள், அங்கே சென்று பார்த்துள்ளார்கள். பாம்பு மரத்தில் சுத்திய நிலையில் இருந்துள்ளது. இதநை அடுத்து பாம்பை மீட்ட அதிகாரிகள் அதனை காட்டில் கொண்டு விட்டுள்ளார்கள். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.