கர்நாடகா மாநிலத்தில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அப்போது அம்மாநில முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, ஷிக்கோனில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு வருகை தந்தார். அங்கு பசவராஜ் பொம்மை, பாஜக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென அந்த அலுவலகத்தினுள் ஒரு நாகப்பாம்பு நுழைந்தது. இதனால், அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த மீட்புப் படையினர் அந்த நாகப்பாம்பைப் பிடித்து பாதுகாப்பான இடத்தில் விட்டனர்.