Advertisment

சிறுமிக்காக உயிரை பணயம் வைத்த இளைஞர்... மக்கள், அரசு அளித்த கௌரவம்...

railway staff

Advertisment

சமீபத்தில் தண்டவாளத்தில் சிக்கிய குழந்தையை, ரயில்வே ஊழியர் ஒருவர் கைப்பற்றிய வீடியோ சமூகவலைதளங்கில்வைரலானது. ரயில்வே ஊழியர் குழந்தையை காப்பாற்றிய இந்த சம்பவம், மஹாராஷ்ட்ராமாநிலத்தில் நடந்துள்ளது. அம்மாநிலத்தில் உள்ளவாங்கனிரயில் நிலையத்தில், பார்வையற்ற பெண்மணி சிறுவயது பெண்ணுடன் வந்துள்ளார்.

அப்போது அந்த சிறுமிதண்டவாளத்தில் தவறி விழுந்துவிட்டது. இதனால் பார்வையற்ற தாய் தனது குழந்தையை தேடி தவித்தார். அதேநேரத்தில்அந்த தண்டவாளத்தில் ரயில் வந்தது. அப்போது அங்கிருந்து ரயில்வே ஊழியர் சிறுமியைகாப்பாற்ற தண்டவாளத்தில் இறங்கி ஓடிவந்தார். இரயில்வேகமாக வந்ததால், ஒருகணம்தண்டவாளத்திரிலிருந்துவெளியேற நினைத்த அவர், அடுத்த கணமே தனது முடிவை மாற்றிக்கொண்டுசிறுமியை தண்டவாளத்திலிருந்து தூக்கி பிளாட்பாரத்தில் விட்டுவிட்டு, அவரும்ஏறி தப்பித்தார்.

ரயில்வே ஊழியரின்இந்த செயலுக்கு பலரும்பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், அந்த ரயில்வே ஊழியர்மயூர் ஷெல்கேஎன்பவர் என தெரிய வந்தது. இதனையடுத்துவாங்கனி ரயில் நிலைய ஊழியர்கள் அனைவரும் இணைந்துமயூர் ஷெல்கேவுக்கு கரவொலி எழுப்பி பாராட்டுதெரிவித்தனர். மேலும் அவரைபாராட்டி சான்றிதழும்வழங்கப்பட்டது.மேலும் மத்திய ரயில்வே துறை அமைச்சர், மயூர் ஷெல்கேவை பாராட்டி50 ஆயிரம் பரிசுத்தொகை அறிவித்துள்ளார்

Advertisment

குழந்தையை காப்பாற்றியது குறித்து பேசிய மயூர் ஷெல்கே, "கண்பார்வையற்ற தாய் தனது குழந்தையை காப்பாற்ற தவிப்பதை பார்த்து குழந்தையை காப்பாற்ற முடிவு செய்ததாகவும், குழந்தையை காப்பாற்ற ஓடும்போது தானும் ஆபத்தில் சிக்கலாம்என நினைத்தாகவும்கூறிய அவர், கட்டாயம் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என நினைத்தேன். நல்லவேளையாக என்னால் குழந்தையை காப்பாற்ற முடிந்தது" என கூறியுள்ளார்.

Maharashtra railway
இதையும் படியுங்கள்
Subscribe