Advertisment

ஜம்மு காஷ்மீரில் குவிக்கப்படும் ராணுவத்தினர்... பதட்டத்தின் உச்சக்கட்டத்தில் மக்கள்...

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பதட்டமான சூழல் நிலவி வந்த நிலையில், இன்று காலை மாநிலங்களவை கூடியது.

Advertisment

Close to 8000 paramilitary troops airlifted and moved to jammu and kashmir

அவை தொடங்கியதும் இந்த விவகாரம் குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்வதாக அறிவித்தார். மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதாகவும் அறிவித்தார். அதன்படி சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு-காஷ்மீர் செயல்படும் என்றும். சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் செயல்படும் என்றும் அறிவித்தார்.

அமித்ஷாவின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவையில் கூச்சலிட்டனர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பதட்டம் அதிகரித்துள்ளதால், அங்கு மேலும் 8000 ராணுவத்தினரை பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 38,000 ராணுவ வீரர்கள் ஜம்மு காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது உத்தரபிரதேசம், ஒடிசா, அசாம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 8000 ராணுவ வீரர்கள் ஜம்மு காஷ்மீர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஏற்கனவே அம்மாநிலத்தில் 144 உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சுமார் 48,000 ராணுவத்தினரை குவித்துள்ளது மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

jammu and kashmir
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe