Advertisment

மசூதிக்கு அருகே நடந்த கொடூரம்; 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மதகுரு!

A cleric hit a 6-year-old girl city near a mosque karnataka

6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக முஸ்லிம் மதகுருவின் தந்தை என்று கூறப்படும் ஒருவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

கர்நாடகா மாநிலம், சிக்கபள்ளாபுரா மாவட்டத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி, மொகல்லா பகுதியில் உள்ள உருது பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி கடந்த 30ஆம் தேதி மாலை நேரத்தில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டுக்காரரான முஸ்லிம் மதக்குருவின் தந்தை கூறப்படும் மெஹ்பூஸ் என்ற நபர், சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார்.

Advertisment

மசூதிக்கு அருகில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று சிறுமியை மெஹ்பூஸ் வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதற்கிடையில், வீட்டில் தனது மகள் இல்லாததை கண்டு சிறுமியின் தாயார் சுற்றித் தேடியுள்ளார். அப்போது, மெஹ்பூஸின் வீட்டின் படிக்கட்டுகளில் இருந்து அழுதுகொண்டே சிறுமி வருவதை தாயார் கண்டுள்ளார். அதன் பின்னர், தனக்கு நேர்ந்த கொடுமைகளை தனது தாயிடம் அழுது கொண்டே கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தாயார், உடனடியாக இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், மெஹ்பூஷ் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்துள்ளார். மசூதிக்கு அருகிலேயே 6 வயது சிறுமியை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

women incident incident karnataka
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe