Advertisment

இதுதான் தூய்மை திட்டமா? அற்றுப்போன மனிதாபிமானம்...!! 

 Is this the cleaning plan? Cut off humanity ... !!

Advertisment

மாநகராட்சி அதிகாரிகளால் ஏழை எளிய ஆதரவற்ற முதியவர்கள்வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட செயல்கண்டனங்களை பெற்றுவருகிறது.

மத்தியப் பிரதேசமாநிலம் உஜ்ஜைன் பகுதியில்உள்ளஷிப்ரா ஆற்றங்கரை ஓரத்தில்திடீரெனவந்து நின்றது ஒரு வாகனம். அந்த வாகனத்தில் இருந்து 10 -க்கும் மேற்பட்ட முதியவர்கள், ஆதரவற்றவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் கீழிறக்கப்பட்டனர். அவர்கள் வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றப்பட்டு கொண்டுவரப்பட்டதை தெரிந்துகொண்டஅங்கிருத்தவர்கள் வலுக்கட்டாயமாக அவர்கள் கீழிறக்கப்பட்டதை வீடியோவாக பதிவு செய்தனர்.

அதன்பின்தான் தெரிந்தது,வந்தது இந்தூர் மாநகராட்சியின் வாகனம் என்று. ‘ஏன் ஆதரவற்ற முதிவர்களை இங்கே இறக்கிவிடுகிறீர்கள்’ எனமாநகராட்சி ஊழியர்களிடம் அங்கிருந்த மக்கள்வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.ஆனால் தூய்மை இந்தூர்திட்டத்திற்காக அவர்களைஅப்புறப்படுத்த வேண்டும் என கொடுக்கப்பட்ட உத்தரவை தாங்கள் நிறைவேற்றியதாக சொல்லிவிட்டு ஊழியர்கள் அங்கிருந்து நகர்ந்தனர்.

Advertisment

முதியவர்களை இறக்கிவிடும் வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி, பெரும் கண்டனத்தைப் பெற்றுவருகிறது. இந்த மனிதாபிமானமற்ற செயலுக்குமத்திய பிரதேசமுதல்வர் சிவ்ராஜிசிங் சவுகான்கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏழைகளுக்கு செய்யும்சேவை கடவுளுக்கு சமமானசேவை. இந்தச் சம்பவத்தை சகித்துக்கொள்ள முடியவில்லைஎனவும்தெரிவித்துள்ளார். தூய்மை திட்டம்என்பது குப்பைகளைஅகற்றுவதா?ஏழைகளை அகற்றுவதா?எனகேள்வியெழுப்பி வருகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

video humanity gone. MadhyaPradesh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe