cleanest cities of india 2020

இந்தியாவின் தூய்மையான நகரங்களுக்கான பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Advertisment

இந்தியாவில் தூய்மையான நகரங்கள் பட்டியலை ஆண்டுதோறும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் 2020 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் மிகவும் தூய்மையான நகரமாக மத்தியப்பிரதேச மாநிலத்தின் இந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக இப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துவந்து இந்தூர், இந்த ஆண்டும் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது.

Advertisment

இதனையடுத்து குஜராத் மாநிலம் சூரத் இரண்டாவது இடத்தையும், மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. தூய்மையான நகரங்களுக்கான இந்த பட்டியலில் முதல் இருபது இடங்களுக்குள் எந்த ஒரு தமிழக நகரமும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.