Clash at Govt Cooperative Petrol Station; CCTV footage released

Advertisment

புதுச்சேரியில் அரசு கூட்டுறவு பெட்ரோல் பங்கில் ஊழியர்களை தாக்கிய இரண்டு இளைஞர்கள் பொருட்களை சேதப்படுத்திவிட்டுச் செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள சுல்தான்பேட்டையில் அரசு கூட்டுறவு பெட்ரோல் பங்க்கிற்கு நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் சிலர் பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்த பொழுது பங்கின் ஊழியர்களிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்த வாக்குவாதமானது தகராறாக மாறியது. இந்த மோதலில் அங்கிருந்த ஊழியர்களை தாக்கிய அந்த இளைஞர்கள் பங்கின் அலுவலகத்திற்கு சென்று அங்கு இருந்த பொருட்களை சூறையாடினர். இது தொடர்பாக போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள வில்லியனூர் போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.